திரைத்துறையில் ஒற்றுமை இல்லை – உதயநிதி ஸ்டாலின் வேதனை!

 திரைத்துறையில் ஒற்றுமை இல்லை – உதயநிதி ஸ்டாலின் வேதனை!

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மகனும், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தென்னிந்திய திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ திரைத்துறையில் இருப்பவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. அவர்களிடம் ஒற்றுமை இருந்தால் மட்டுமே திரைத்துறை அடுத்த இடத்திற்கு முன்னேறும்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு 2000 கோடி சொத்து உள்ளதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். அது உண்மையல்ல. திரைத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு தெரியும்.

தமிழ்நாடு அரசு திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. திரைப்படத்துறை சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார்.” என்று கூறினார்.

 

Related post