Uncharted Movie Review Tamil

 Uncharted Movie Review Tamil

Uncharted : ஸ்பைடர்மேன் ஆக வலம் வரும் டாம் ஹோலண்ட் இந்த படத்தில் நாதன் டிராக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதை உலகளவில் பேமஸ் ஆக இருக்கும் Uncharted  வீடியோ கேம் தழுவி படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாதன் தனது அண்ணனுடன் சிறுவயதில் ஒரு தங்க புதையலுக்கான வரைபடத்தை திருடும் போது போலீஸிடம் மாட்டி கொள்கிறார்கள். அண்ணன் சாம் தனது தம்பியை விட்டு செல்கிறார் , நாளைடைவில் பெரியவனாக வளரும் நாதன் அண்ணன் நண்பர் மார்க் வால்பர்க் அறிமுகம் ஆகிறார். உன் அண்ணன் தேட நினைத்த அந்த தங்க புதையலை நாம் தேடி கண்டுபிடித்தல் உன் அண்ணணனை கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு என்று கூறி இருவரும் தங்கத்தை தேடும் சாகச பயணத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் சந்திக்கும் சாகச பயணம் தான் படத்தின் கதை.

டாம் ஹொலண்ட் நாதன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். பல இடங்களில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சீனியர் நடிகர் மார்க் வால்பேர்க் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார், எந்த காட்சிகளிலும் அவர் பொருந்தி போகிறார். நாயகி சோபியா அலி இந்த இருவரையும் நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். மற்றபடி படத்தின் விசுவல் காட்சிகள் நம்மையும் ஒரு சாகச பயணத்துக்கு கூடி செல்கிறது. படத்தின் மைய கதை தங்க புதையலை தேடி செல்வது என்றாலும் அதை சுவாரசியமான திரைக்கதை மூலம் நம்மை கட்டி போடுகிறார் இயக்குனர் ruben fleischer.

Uncharted : பொழுதுபோக்கு 

Related post