Uttran – திரைப்படம் விமர்சனம்

உற்றான் – 1994 ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட திரைப்படம் தான் இந்த உற்றான்.காதலால் கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ராஜா கஜினி. படத்தில் கல்லூரிகளில் நடக்கும் வன்முறைகளையும்,அதனால் மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதையும் விவரிக்கிறது படத்தின் கதை.உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தன்னுடைய கற்பனையும் அதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் நாயகன் ரோஷன் தன்னுடைய இருவேறு முகங்களை காட்டி முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். படத்தின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார் அவருடைய நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் அரசியல்வாதியாக தோன்றி மிரட்டுகிறார் நடிகர் வேல ராமமூர்த்தி. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு அமைத்துள்ளார். படத்தின் பாடல்களை கேட்கும்படி தந்திருக்கிறார் என்.ர்.ரகுநந்தன். படத்தின் நீளத்தை இன்னும் கூட சிறிது குறைத்திருக்கலாம்.படத்தின் இயக்குனர் கதையினை நன்றாக தேர்வு செய்தாலும் திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
உற்றான் – முயற்சி