உழைப்பாளர்கள் தினம் – விமர்சனம்
சாதாரண கிராமத்தில் பிறந்து சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.
விடுமுறை தினத்திற்கு தனது சொந்த ஊருக்கு வரும் சந்தோஷிற்கு, திருமணம் செய்து வைக்கிறார் அவரது பெற்றோர்..
திருமணம் முடிந்த 15 நாட்களில் மீண்டும் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விடுகிறார் சந்தோஷ்..
தனது அண்ணன் குடித்து குடித்து குடும்பத்தின் இன்னல்களைபாராமல் இருப்பதால், குடும்ப பாரம் அனைத்தும் சந்தோஷின் தலையில் வந்து விழுகிறது.
அதே சமயம். சந்தோஷின் மனைவியான குஷி கர்ப்பமாகிறார். பிரசவம் சமயத்தில் கண்டிப்பாக வரவேண்டும் என்று மனைவி சந்தோஷிடம் கூறுகிறார்.
ஆனால், அவரால் பிரசவத்திற்கு வர இயலாத சூழல். அதன்பிறகு இவர்களது வாழ்வில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
டூ லெட் மற்றும் வட்டார வழக்கு படங்களில் நடித்த நாயகனே இப்படத்திலும் நாயகனே. மிகவும் இயல்பான ஒரு வாழ்வியல் கதையில் நடித்து அசத்தியிருக்கிறார் சந்தோஷ். இவரே இப்படத்தின் இயக்குனர் என்பதால் காட்சிகள் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான மெனக்கெடலை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.
நாயகி குஷி, கண்களால் ஆயிரம் கவிதைகளை பாடிவிட்டுச் செல்வது போன்ற நடிப்பைக் கொடுத்து கவர்கிறார். கணவனிடம் கொஞ்சி விளையாடும் காட்சிகள் ரசிக்க வைத்தன.
மிகவும் வாழ்வியல் நோக்கோடு எடுக்கப்பட்ட இப்படத்தில் இன்னும் சற்று உயிரோட்டமான திரைக்கதை அமைத்திருந்தால், உழைப்பாளர்கள் தினம் உயிர் பெற்றிருக்கும்.
பாடல்களின் வரிகள் கவனிக்கும்படியாக இருந்தது. இசையில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம். ஒளிப்பதிவும் ஓகே ரகமாக கடந்து செல்ல வேண்டியிருந்தது.
மொத்தத்தில்,
உழைப்பாளர்கள் தினம் – உழைப்பாளர்களின் கதை…