வாடிவாசலுக்கு தயாராகும் காளைகள்… ஷூட்டிங்க் அப்டேட்!

 வாடிவாசலுக்கு தயாராகும் காளைகள்… ஷூட்டிங்க் அப்டேட்!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்க வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றி மாறன்.

கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்க் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் முழு திருப்தி அடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், இரண்டு காளைகளை சூர்யா தற்போது வளர்த்து வருகிறார். இந்த காளைகளே படத்தின் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படவிருக்கிறது.

சூர்யா தற்போது பாலாவின் “வணங்கான்”, சிவாவின் “சூர்யா 42” இருபடங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களை சூர்யா முடித்ததும் டிசம்பர் மாதத்தில் வாடி வாசல் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related post