தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாய்தா பட கதாநாயகி!

 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாய்தா பட கதாநாயகி!

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதும், அது மட்டும் இன்றி அந்த கடிதத்தில் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கைகூடவில்லை..

அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

 

Related post