வாத்தி” இசை வெளியீட்டு விழா!

 வாத்தி” இசை வெளியீட்டு விழா!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது “வாத்தி”. இப்படத்தில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

முதல் முறையாக இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறார் தனுஷ்.

நடிகர் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிப்ரவரி 17 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தள்ளிச் செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

vaththi, dhanush, audio launch

Related post