நீங்க தான் எனக்கு மகனா பொறக்கணும்… வடிவேல் பாலாஜி புகைப்படத்தை வைத்து வாழ்த்து பெற்று புகழ்!!

KPy மூலம் அனைவருக்கும் பரிட்சயமானவர் தான் புகழ். அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார் புகழ்.
தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த புகழ், தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் தன் காதலியான பென்சியாவை குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் புகழ்.
தனது வீட்டில் வைத்திருந்த மறைந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்திற்கு கீழே மணமக்கள் ஜோடியாக நின்று ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் புகழ்.
மேலும், அதில் “இனிய திருமண வாழ்த்துகள் மாமா. உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்தகட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசீர்வாதம் எப்பவும் அங்க இரண்டு பேருக்கும் இருக்கும்னு நம்புறேன். கண்டிப்பா நீங்க தான் என் மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுளை வேண்டிக்கிறேன்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் புகழ்.