போண்டா மணிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் – வடிவேலு!

 போண்டா மணிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் – வடிவேலு!

திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார் நடிகர் வடிவேலு.

சிறப்பு தரிசனத்தில் முருகனை வழிபட்ட வடிவேலு, பின் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

மேலும் பேசிய வடிவேலு ” நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தில் நான் குணசித்திர நடிகனாக நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.

 

Related post