வாரிசு ஆடியோ லான்ஞ்ச்… விஜய் போட்ட ப்ளான்!

 வாரிசு ஆடியோ லான்ஞ்ச்… விஜய் போட்ட ப்ளான்!

விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இதில் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் வாரிசு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதென திட்டம் இருந்ததாம்.

ஆனால், அது இப்போது வேண்டாம் என விஜய் கூறிவிட்டாராம். இசை வெளியீட்டு விழாவை முடித்த கையோடு தனது குடும்பத்தோடு லண்டன் கிளம்பிச் செல்கிறாராம் விஜய்.

புதுவருடத்தை அங்கு கொண்டாடிய பிறகு சென்னை திரும்புகிறாராம்.

வந்தவுடன் சென்னையில் 7 ஸ்கிரீன்ஸ்டுடியோ லலித்குமார் புரொடக்‌ஷனில் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

 

Related post