300 கோடியை தொட்ட வாரிசு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 300 கோடியை தொட்ட வாரிசு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் வாரிசு.

கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், குடும்பங்களாக படத்தை பார்க்க வந்ததால் படம் வசூல் வேட்டை நடத்தியது.

பொங்கலுக்குப் பிறகு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாத காரணத்தினால் வாரிசு அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக படம் ஓடுவதால் படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சற்று முன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாரிசு திரைப்படம் இதுவரை 300 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

Related post