விஜய்யின் வாரிசு படத்தில் இவரா.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

 விஜய்யின் வாரிசு படத்தில் இவரா.? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “வாரிசு”.

இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமாக நடித்து வருகிறார்கள். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க குடும்ப படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவும் இப்படத்தில் இணைந்திருக்கிறாராம். பெரிய கதாபாத்திரமாக இல்லாமல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

ஏற்கனவே, நண்பன் மற்றும் மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்த எஸ் ஜே சூர்யா மூன்றாவது முறையாக வாரிசு படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார்.

 

Related post