துணிவு படத்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய வாரிசு
இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வைரலானது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. வாரிசு பொங்கல் வெளியீடாக 12ஆம் தேதி திரைக்கும் வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
வாரிசு ட்ரெய்லர் வெளியான ஓரிரு மணித்துளிகளில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்..
ஜனவரி 11 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவித்தார் போனி கபூர்.
இதனால், நாங்களும் 11ஆம் தேதி வருகிறோம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. இதனால் இரண்டு படங்களும் வரும் 11ஆம் தேதி அன்று நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ளது.