மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட வாரிசு!

 மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட வாரிசு!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் படப்பிடிப்பில் 100க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5 யானைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்திருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்த செய்தி நேற்று இணையத்தில் வைரலாக பரவ, வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி 5 யானைகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறி விலங்குகள் நல வாரியம் வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நலவாரியம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனால் படக்குழு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

Related post