பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “வாரிசு” ஷோ!

 பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “வாரிசு” ஷோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க பொங்கல் கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் “வாரிசு”. படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில், வசூல் மழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில் கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெண்கள் மட்டும் படத்தினைக் காண சிறப்பு காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கோயம்புத்தூரை அடுத்த சாவடி பகுதியில் உள்ள கவிதா சினிமாஸ் என்ற திரையரங்கம் முழுவதும் வாரிசு படத்திற்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சிக்கு பெண்கள், மற்றும் பெண் குழந்தைகள் மட்டும் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சிறப்பு காட்சியில் வாரிசு திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.

ஆட்டம் பாட்டத்துடன் இந்த காட்சியை அவர்கள் கண்டுகளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Related post