ரீ-என்ட்ரியில் மிரட்டும் பாபி சிம்ஹா; வசந்த முல்லை ட்ரைலர் வெளியீடு;

 ரீ-என்ட்ரியில் மிரட்டும் பாபி சிம்ஹா; வசந்த முல்லை ட்ரைலர் வெளியீடு;

சூதுகவ்வும் படத்தின் மூலம் நயன்தாராவுக்கு சிலை வைத்து நம் அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. இவர் வில்லனாக மிரட்டிய ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் வரவேற்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தனது இடத்தை பிடிப்பதற்காகவே சொந்த தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் வசந்த முல்லை என்ற படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஷ்மிரா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இப்போது ட்ரெய்லர் 5 மூத்த பத்ரிக்கையாளர்களால் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

வசந்த முல்லை என்ற பங்களாவினுள் செல்லும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி சில பிரச்சனையை சந்திக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சில படங்கள் மிரட்டி வரும் ஆர்யா இந்த ட்ரெய்லரிலும் ரசிகர்களை பயமுறுத்தி உள்ளார்.

பாபி சிம்ஹா மற்றும் ஆர்யா கூட்டணியில் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லர் ஏற்படுத்தி உள்ளது. மேலும் வசந்த முல்லை படத்தை பாபி சிம்ஹா தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

கண்டிப்பாக வசந்த முல்லை படம் பாபி சிம்ஹாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு நேரம் மற்றும் பிரேமம் படங்களில் இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ஆகையால் வசந்த முல்லை படத்தின் பாடல்கள் வேற லெவலில் உருவாகியுள்ளது.

Related post