5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் !

 5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து, சாதனை படைத்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” டீசர் !

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடித்துள்ள “வீரமே வாகை சூடும் “ படத்தின் டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டு 5 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷாலின் மாறுப்பட்ட நடிப்பில், அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியானது. வெளியான நொடியிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில், இணையத்தில் வைரலாக பரவியது. 5 மணிநேரத்தில் இப்படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்தது.

இப்படத்தின், இசைகோர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது. வரும் குடியாரசு தினம் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,
மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் புதுமுக இயக்குனர் து.ப.சரவணனன் எழுதி இயக்குகிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

Related post