வீரன் விமர்சனம்

 வீரன் விமர்சனம்

ஹிப் ஹாப் ஆதி, ஆதிரா, வினய், நக்கலைட்ஸ் சசி, முனீஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில், ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “வீரன்”.

கதைப்படி,

நாயகன் ஹிப் ஹாப் ஆதிக்கு சிறுவயதில் மின்னல் தாக்கி, அவருக்கு மின்னலை வெளிப்படுத்தும் சக்தியும், சிந்தனையை கண்ட்ரோல் செய்யும் சக்தியும் கிடைக்கிறது.

அதன்பின், சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் அவர். மீண்டும் தனது சொந்த ஊரான வீரனுக்கு திரும்பி வருகிறார்.

அப்போது அந்த ஊரில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று மின்சார உற்பத்திக்காக லேசர் பைப் ஒன்றை அமைக்க திட்டம் தீட்டுகிறது. அதற்கு ஊர் மக்கள் ஒரு சிலர் சம்மதம் தெரிவிக்க, பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால், அந்த திட்டத்தால் ஊருக்கு பாதிப்பு இருப்பதை அறிந்த ஹிப் ஹாப் ஆதி அவருக்கு இருக்கும் சக்தியை வைத்து தடுக்க நினைக்கிறார்.

அவர் எப்படி தடுத்து நிறுத்தினார் என்பதை சுவாரஸ்யமான இரண்டாம் பாதி விளக்கும்.

ஹிப் ஹாப் ஆதி வழக்கமான நடிப்பு தான். அதே கொங்கு தமிழை மட்டுமே பேசியுள்ளார் ஆதி. புதிய முயற்சி என்று பார்த்தல், ஆக்ஷன் தான். ஆக்ஷனில் அதகளம் செய்து அவரின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் ஆதி.

குறிப்பாக, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவும், ஸ்டான்டும் சிறப்பாக இருந்தது.

கமெர்சியல் படத்திற்கு போடப்பட்ட விதியை மாற்றாமல் இப்படத்திலும் ஹீரோயினை வைத்துள்ளனர். கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் ஆதிரா.

கேமியோ ரோலில் மீண்டும் மிரட்டியுள்ளார் வினய்.

காளி வெங்கட் மற்றும் முனீஸ்காந்தின் காம்பினேஷன் அங்கங்கே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

நக்கலைட்ஸ் சசி படம் முழுக்க வந்து சிரிக்க வைத்தும், சீரியஸாகவும் கலக்கியிருக்கிறார். அநேகமாக, சிறந்த துணை பாத்திரத்திற்கான விருதை இவர் பெற வாய்ப்புள்ளது.

சமூக அக்கறையோடு உருவான ஒரு சூப்பர் ஹீரோ கதையை சிந்தித்த இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் பாதியிலிருந்த பரபரப்பையும், எமோஷனல் கனெக்ட்டையும் முதல் பாதியில் கொடுத்திருந்தால் இப்படம் உறுதியான வெற்றிப்படைப்பாக அமைந்திருக்கும்.

ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஜீவாவின் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி ரசிக்கும் ரகம்.

வீரன் – ஊர்காவலன் –  (3/5);

Related post