Velvet Nagaram – திரைப்படம் விமர்சனம்

 Velvet Nagaram – திரைப்படம் விமர்சனம்

வெல்வெட் நகரம் – நடிகை வரலட்சுமி சரத்குமார் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கும் திரைப்படம்.படத்தின் கதை, மலைவாழ் மக்கள்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் நடிகை கஸ்தூரி மர்ம நபர் ஒருவரால் கொல்லப்படுகிறார். அவரது தோழியான வரலட்சுமி அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை தேடி ஆராய தொடங்குகிறார். கஸ்தூரியிடம் அரசு சம்பந்தப்பட்ட ஆவணம் ஒன்று இருப்பதும் அதை அவர் இருவருக்கும் தெரிந்த தோழி வீட்டில் மறைத்து வைத்திருப்பதை அறிந்துகொள்கிறார் வரலட்சுமி. அதை எடுக்க தனது தோழி வீட்டுக்கு செல்லும்போது வீட்டுக்குள் ரவுடி கும்பல் ஒன்று புகுந்து அனைவைரையும் அடித்து பணம் கேட்டு மிரட்டுகிறது. இந்த சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட நாயகி தப்பித்தாரா? கொலைக்கான காரணத்தை கண்டறிந்தாரா? என்பது மீதி கதை.

படத்தின் முதல் நாயகனாக மிளிர்வது வரலட்சுமி மட்டும் தான், நேர்த்தியான நடிப்பால் பதட்டத்தை நமக்குள் கடத்திச்செல்கிறார். அவரின் தோழியாக வரும் மாளவிகா சுந்தர் அவர்களின் நடிப்பும் மிக அருமையாக உள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் கதாபாத்திரங்களாக சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் இல்லை என்பது மற்றுமொரு சுவாரசிய தகவல். ஆனால் படத்தின் பின்னணி இசை காட்சிக்கு கை கொடுக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு தரம். படத்தின் எடிட்டிங் தேவையான காட்சிகளை மட்டும் வைத்து ரசிக்க வைக்கிறது. படத்தின் இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன் ஒரு சீரியசான கதையில் எந்தவித தொய்வும் இல்லாமல் கதையை நகர்த்தி செல்கிறார், அதற்காகவே இவரை பாராட்டலாம்.

Spread the love

Related post

You cannot copy content of this page