ஏகே 62.. வெங்கட் பிரபும் லிஸ்டில் இருக்கிறார்.!?

 ஏகே 62.. வெங்கட் பிரபும் லிஸ்டில் இருக்கிறார்.!?

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தனது 62வது படத்தை இயக்கும் வாய்ப்பினை இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்திருந்தார் அஜித். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித் படத்தை மகிழ் திருமேணி இயக்குவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேலையில், வெங்கட் பிரபுவிடமும் அஜித் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், துணிவு படத்தினை இயக்கிய ஹச் வினோத் ஒரு கதை வைத்திருப்பதாகவும் அது அஜித்திற்கு பிடித்து போய்விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எது உண்மை என்பது இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Related post