Venom 2 : திரைப்படம் விமர்சனம்
வெனோம் முதல் பாதியின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பிரம்மாண்டமாக இந்தியாவில் வெளியாகியுள்ளது. வெனோம் ஆக தோன்றி அசத்திய டாம் ஹார்டி (எடி பிராக்) ஆக திரும்பி வந்து அதகளம் செய்கிறார். இனி வெனோம் போன்ற கதாபாத்திரங்களை மார்வெல் திரைப்படங்களிலும் காணலாம் என்ற ஆவலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம். வழக்கம் போல ஏலியன் மற்றும் சிம்பியோட் இடையே நடக்கும் அசுர மோதல் தான் கதை, ஆனால் இந்த முறை தந்தை மகனாக மோதி கொள்கிறார்கள்.
படத்தின் வில்லனாக வுடி ஹரேல்சன் அசத்துகிறார். காதலிக்காக அவர் செய்யும் விஷயங்கள் ரசிக்கும்படி உள்ளது. எடி பிராக் மற்றும் வெனோம் இடையே நடக்கும் சண்டையும் அவர்கள் திரும்ப சேர போராடும் இடங்களும் நன்றாக உள்ளது. படத்தின் தமிழ் பதிப்பும் வெளிவந்துள்ளது விருப்பமுள்ளவர்கள் தமிழிலேயே கண்டுகளிக்கலாம். ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பிடிக்கும் படி தந்துள்ளார் இயக்குனர் அண்டி செர்கிஸ்.