வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர்!

 வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர்!

இயக்குனர் வெற்றி மாறன் தற்போது சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடி வாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ஜூனியர் என் டி ஆரை சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்த வெற்றிமாறன் ஒரு கதையை அவரிடம் கூறியிருக்கிறார்.

அந்த கதை அவருக்கு பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஜூனியர் என் டி ஆர் தற்போது கொரட்டலா சிவா மற்றும் கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடிப்பார் என்று தெரிகிறது.

 

Related post