கமலை இயக்கும் வெற்றிமாறன்.!?

 கமலை இயக்கும் வெற்றிமாறன்.!?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

அதேபோல், இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தினை இயக்கிமுடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் பாகம் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவாகவே கமலை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தினை முடித்த பிறகே வாடிவாசல் படத்தினை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தினை ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். இப்படம் பான் இந்தியா படமாக உருவாக்கவும் கமல் திட்டம் தீட்டியுள்ளாராம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாமும் காத்துக் கொண்டிருப்போம்,.

 

Related post