50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க் மினிட்ஸை கடந்த “விடுதலை”!

 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க் மினிட்ஸை கடந்த “விடுதலை”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என நட்சத்திரங்களில் சிலரின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”.

இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரிதாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது. வெளியான மிகக் குறைவான நேரத்திற்குள்ளாக 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க மினிட்ஸை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.(ஸ்ட்ரிமீங் மினிட்ஸ் என்பது ஒரு படம் மொத்தம் எத்தனை நிமிடங்கள் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது என்பதை குறிப்பது.)

குறைந்த காலத்தில் இப்படியொரு சாதனை படைத்திருப்பது படக்குழுவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

 

Related post