வெற்றிமாறனின் “விடுதலை”யை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் தான் “விடுதலை”.
இப்படத்தினை ஆர் எஸ் இன்போர்டெயின்மெட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தின் வெளியீட்டு வேலைகளையும் கையோடு பார்த்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வெளியீட்டு நிறுவனமாக விளங்கி வருகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
இந்நிறுவனம் தான், தற்போது விடுதலை படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.
இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் வெளியீட்டு தேதியையும் அறிவிக்க இருக்கிறதுபடக்குழு.