வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி… ஏகே 62.?

 வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி… ஏகே 62.?

அஜித் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படம் உருவாகும் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் தற்போது மகிழ் திருமேனி இருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். அதில் குறிப்பாக ‘கெடைச்சத இழக்குறதும், இழந்தது கெடைக்குறதும்’ எனும் வரிகளை அதில் வைத்திருக்கிறார்.

ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நாளில் விக்னேஷ் சிவன் இந்த சோகமான பாடலை வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post