மீண்டும் அட்லீயோடு.. தளபதி போடும் ஸ்கெட்ச்!

 மீண்டும் அட்லீயோடு.. தளபதி போடும் ஸ்கெட்ச்!

தளபதி விஜய் தற்போது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இப்படத்தினைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தினை இயக்குனர் அட்லீ இயக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ வைத்திருக்கும் கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும் அடுத்த படமே அதை எடுக்கலாம் என்று விஜய் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post