1500 நடன கலைஞர்கள்; “லியோ”வில் களமிறக்கிய லோகேஷ்!

 1500 நடன கலைஞர்கள்; “லியோ”வில் களமிறக்கிய லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஒரு தனியார் செட் ஒன்றில், லியோ படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம்.

அதற்காக சுமார் 1500 நடனக் கலைஞர்களை ஈடுபடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.

3 நாட்கள் இந்த பாடலை ஷூட் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளார் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர்.

இந்த பாடலில் விஜய்யும் ஆடவிருக்கிறார்.

விரைவில் அதற்கான ஷூட்டிங்க் ஆரம்பமாகும் என்கிறது படக்குழு வட்டாரத்தினர்.

 

Related post