30 ஹேர்ஸ்டைல்… லியோ படத்தில் விஜய் எடுத்த ரிஸ்க்!

 30 ஹேர்ஸ்டைல்… லியோ படத்தில் விஜய் எடுத்த ரிஸ்க்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொண்டார் என்பதை ஒரு வீடியோ வெளியிட்டு தெரிவித்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில், தளபதி விஜய்யின் ஹேர்ஸ்டைல் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் இப்படத்திற்காக சுமார் 30 விதமான ஹேர்ஸ்டைல் விஜய்க்கு செய்யப்பட்டதாம், அதில் தற்போது லியோ படத்திற்காக இருக்கும் இந்த ஹேர் ஸ்டைலை இயக்குனர் லோகேஷ் ஓகே செய்தாராம்.

தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி பரவி வருகிறது.

Related post