ஷாருக்கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்!

 ஷாருக்கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி விஜய்!

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக கவரப்பட்டது.

இப்படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் மனைவியே இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். தளபதி விஜய் நட்புக்காக இப்படத்தில் ஒரு கெளரவ தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அட்லீயுடன் மூன்று படங்கள் பணியாற்றிய விஜய், ஷாருக்கானிடமும் நல்ல நட்புடன் இருப்பதால், இந்த சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post