டைட்டிலை அறிவித்து மாஸ் காட்டிய விஜய் படக்குழு

 டைட்டிலை அறிவித்து மாஸ் காட்டிய விஜய் படக்குழு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க தளபதி விஜய் நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சில தினங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இணையதளங்கள் விஜய் ரசிகர்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் விக்ரம் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஒரு ப்ரொமோ வீடியோ போன்று இந்த படத்திற்கும் ஒரு ப்ரொமோ வீடியோ வெளியிட்டு படத்தின் டைட்டிலை அறிவித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

”லியோ” என டைட்டில் வைத்துள்ள படக்குழு, வழக்கமான லோகேஷ் கனகராஜின் ஆக்‌ஷன் படமாக இருப்பது போன்று அந்த ப்ரொமோ உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ஸ்டைலிஷான லுக் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Related post