ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டை.. – விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி

 ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டை.. – விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

இவரது ரசிகர்களும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,

கோவை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தொண்டமுத்தூர் ஒன்றியம்/கோவை வடக்கு நகரம்/சுக்ரவார்பேட்டை மற்றும் உக்கடம் பகுதி/சுல்தான் பேட்டை ஒன்றியம்/அன்னூர் ஒன்றியம்/டவுன்ஹால் பகுதி கிணத்துக்கடவு நகரம் ஆகிய 7 இடங்களில், பசியால் வாடும் ஏழைகளுக்கு ரொட்டி, பால், முட்டைகளை வழங்கினர்.

இந்த நலத்திட்ட உதவி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page