மனோபாலாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய்!

 மனோபாலாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக தமிழ் சினிமாவில் இருந்து வந்தவர் மனோபாலா. 69 வயதான இவர், தற்போது காமெடி கலைஞனாக தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வந்தார்.

நேற்று மாலை, உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மனோபாலாவின் மறைவை கேட்டதும் உடனே வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய்.

இயக்குனர் ஹச் வினோத், சரத்குமார், மதன்பாப், ரமேஷ் கண்ணா, சமுத்திரக்கனி, சிவக்குமார், மணிரத்னம், கவுண்டமணி, நாசர், மாரி செல்வராஜ், பரத், சுந்தர் சி, அமீர், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், ஆர்யா, சேரன், உள்ளிட்டவர்கள் மனோபாலாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

Related post