துணிவு கொடுத்த வேதனை; இயக்குனரை கழட்டி விட்ட விஜய் சேதுபதி!!

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் தான் துணிவு.. படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் பொங்கல் தினத்திற்கு படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது..
இந்நிலையில் இப்படத்தை முடித்ததும் இயக்குனர் ஹச் வினோத் நடிகர் விஜய் சேதுபதி வைத்து ஒரு படம் இயக்குவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், துணிவு படத்தினை முடிக்க மிக அதிக காலம் எடுத்துக் கொண்டதால் கடுப்பான விஜய் சேதுபதி, இயக்குனர் ஹச் வினோத்தை கழட்டி விட்டு விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தினை இயக்கிய ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியோடு வடிவேலும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது . விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..