தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!
தனக்கு ஹீரோ மட்டுமல்ல எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிப்பேன் என்று கூறுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இவரது வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.
விஜய்க்கு நிகராக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இச்சூழலில், பல மொழிகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படவுள்ளது.