தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள்.? பரபரக்கும் அப்டேட்!

 தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள்.? பரபரக்கும் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கிறது “தளபதி 67”. இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதில், சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நான்காவது வில்லனாக விஜய் சேதுபதியும், ஐந்தாவது வில்லனாக கவுதம் மேனனிடம் படக்குழு பேசி வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது.

இந்நிலையில், தளபதி 67 படத்தின் ஆறாவது வில்லனாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா நடிக்கப்போவதாகவும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

Related post