நடிகர் சங்க கட்டிடத்தில் முதல் விழா விஜயகாந்திற்கு தான் – விஷால்

 நடிகர் சங்க கட்டிடத்தில் முதல் விழா விஜயகாந்திற்கு தான் – விஷால்

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெற்றது.

விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் விஷால், “ நடிகர் சங்கம் கட்டிடத்தை பொறுத்தவரை இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும்.

நடிகர் சங்க கட்டிடத்தைப் பொறுத்தவரை அதற்கான பத்திரத்தை மீட்டுக் கொடுத்தவர் கேப்டன் தான்.

அதனால் கட்டிடப் பணிகள் நிறைவடைந்தவுடன் முதல் விழாவாக, கேப்டன் விஜய்காந்த் சாருக்கான பாராட்டு விழா அங்கே நடத்தப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Related post