விஜயகாந்த் மகனை இயக்கும் பிரபல இயக்குனர்…!!

 விஜயகாந்த் மகனை இயக்கும் பிரபல இயக்குனர்…!!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியா நட்சத்திரமாக விளங்கியவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அரசியல் பிரவேசம் எடுத்தப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார் விஜயகாந்த்.

இந்நிலையில், அவரது இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சண்முக பாண்டியன், தொடர்ந்து மதுர வீரன் என்ற படத்திலும் நடித்தார்.

இவ்விரு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் போனது. இந்நிலையில், மித்ரன் என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் சண்முக பாண்டியன்.

தனக்கென்று முத்திரை பதித்தாற் போல் ஒரு படம் வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், தற்போது இயக்குனர் சசிகுமார் ஒரு படம் இயக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சண்முக பாண்டியன் தான் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம். இதனால், பெரும் உற்சாகத்தில் இருக்கிறாராம் சண்முக பாண்டியன்.

Related post