பழைய கேப்டனாக கர்ஜிக்க வாங்க …. ரஜினிகாந்த் ட்விட்!!

 பழைய கேப்டனாக கர்ஜிக்க வாங்க …. ரஜினிகாந்த் ட்விட்!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தை தன்னகத்தே வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை துவங்கி தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக வளர்ந்தார்.

அதன்பிறகு, அவரது உடல் நிலை காரணமாக அவ்வப்போது மட்டுமே வெளி உலகிற்கு வந்து செல்லக் கூடிய சூழல் உருவானது.

தற்போது, அவரது காலில் சீரான இரத்த ஓட்டம் இல்லை எனக் கூறி அவரது கால் விரல் மூன்றை மருத்துவர்கள் அகற்றி விட்டனர்.

இதனைக் கேட்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

 

Related post