அரண்மனை 4-ல் விஜய் சேதுபதி; அடுத்தடுத்து காமெடியனாக ஒப்பந்தமாகியுள்ள ஹீரோ;

 அரண்மனை 4-ல் விஜய் சேதுபதி; அடுத்தடுத்து காமெடியனாக ஒப்பந்தமாகியுள்ள ஹீரோ;

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான “காபி வித் காதல்” திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால், மீண்டும் தன்னுடைய ஹிட் லிஸ்டான அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார். இந்த படத்தில் வினய், ஹன்சிகா, அண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திரிஷா, ஹன்சிகா ஆகியோரை வைத்த அரண்மனை 2 படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க படத்தின் மூன்றாம் பாகத்தை கடந்த 2021ல் சுந்தர் சி இயக்கியிருந்தார்.

அந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இல்லை இந்த படம். கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை அரைத்த மாவை அரைத்தது போல் தான் இருந்தது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான கமர்சியல் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் அரண்மனை 4 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது, இவர் இயக்கவுள்ள அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதிக்கு தமிழில் தொடர் தோல்வி படங்கள் தான்.

இப்போதுள்ள சூழ்நிலையோ, இருவருமே கம்பேக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை தான்.

மேலும் இந்த படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வி அடைந்து வரும் வேளையில் இப்போது மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க முன்வந்துள்ளார்.

அஜித்தின் ஏகே 62 படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அரண்மனை 4 படத்திலும் சந்தானம் நடிக்க உள்ளார். மேலும் அரண்மனை படத்தை லைகா ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

சுந்தர் சி, விஜய் சேதுபதி, சந்தானம் என தொடர் தோல்வியில் இருக்கும் இவர்களின் கூட்டணி “அரண்மனை 4” படத்தின் மூலம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

 

Related post