இத்தனை கோடியா.? விஜய் சேதுபதியால் வாயடைத்துப் போன தயாரிப்பாளர்கள்!

 இத்தனை கோடியா.? விஜய் சேதுபதியால் வாயடைத்துப் போன தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து படிப்படியாக வளர்ந்து இப்போது அசைக்க முடியா ஆலமரமாய் உயர்ந்து நிற்கும் நட்சத்திரம் தான் விஜய் சேதுபதி.

தனது நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் படுத்தி வைத்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல், வில்லனாகவும் திரையில் தோன்றி அசத்தி வருகிறார்.

பல மொழிகளிலும் தோன்றி நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

படிப்படியாக தனது சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே வந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, அதற்கான சம்பளமாக சுமார் 35 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்,பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பளத்தை ஏற்றிக் கொள்ளலாம் அதற்காக ஒரே அடியாக ஏற்றிக் கொண்டால் எப்படி என்று புலம்பி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

Spread the love

Related post