75 நாட்களில் 500 கோடி; வரலாறு படைத்த விக்ரம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”.
இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருந்தார்.
நேற்றோடு இப்படம் வெளிவந்து சுமார் 75 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக் குவித்துள்ளது.
இது ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. விக்ரம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.