அமெரிக்காவில் வசூல் வேட்டை நிகழ்த்தும் கமல்ஹாசனின் “விக்ரம்”!

 அமெரிக்காவில் வசூல் வேட்டை நிகழ்த்தும் கமல்ஹாசனின் “விக்ரம்”!

கம்ல்ஹாசனின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”.

இப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது விக்ரம். விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. விக்ரம் படம் வெளியான மூன்று நாட்களில் மட்டும், 15 லட்சம் டாலர்கள் வசூல் ஈட்டியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய் ஆகும்.

தொடர்ந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விக்ரம். வசூலில் இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் எனவும் நம்பப்படுகிறது.

Related post