கோப்ராவை தொடர்ந்து மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்.!?

 கோப்ராவை தொடர்ந்து மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்.!?

Vikram has been admitted to a hospital in Chennai. File photo

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களைத் தொடர்ந்து கோப்ரா படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

இதில் விக்ரம் பல்வேறு தோற்றத்தில் தோன்றி மிரட்டியிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோப்ரா பட டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது

இந்நிலையில், மீண்டும் அஜய் ஞானமுத்து விக்ரமோடு இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரம், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு தயாராகி வருகிறார்.

இப்படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

 

Related post