மே 15ல் வெளிவருகிறது “விக்ரம்” பட பாடல் மற்றும் ட்ரெய்லர்..!!

 மே 15ல் வெளிவருகிறது “விக்ரம்” பட பாடல் மற்றும் ட்ரெய்லர்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”. வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் ப்ரொமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் வேலையில், இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றனர் படக்குழுவினர். இம்மாதம் 15 ஆம் தேதி அதற்கான விழா நடைபெறும் என அறிவித்திருக்கின்றனர்.

இப்படத்தினை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் சார்பில் தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Related post