ஒன்றியத்தின் தப்பாலே… மத்திய அரசை கடுமையாக சாடி பாடல் வெளியிட்ட கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ”பத்தல பத்தல” என்ற பாடல் நேற்று மாலை வெளியானது.
இந்த பாடலை கமல்ஹாசனே எழுதியும் உள்ளார். இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒன்றிய மத்திய அரசை கடுமையாக சாடி வெளியிட்டுள்ளார்.
அதில்,
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே..
பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ளது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.