தங்கலான் படத்திற்காக விக்ரம்….

 தங்கலான் படத்திற்காக விக்ரம்….

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகி வருகிறது தங்கலான்., படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இத்திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் தனது தோற்றத்திற்காக நாள்தோறும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். விக்ரமின் இந்த ஓயாத உழைப்பு தான் அவரை இந்த இடத்தில் இருக்க வைத்திருக்கிறது என்கின்றனர் படக்குழுவினர்.

மேலும் விக்ரமின் கெரியரில் இது ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.

 

Related post