மலேசியாவில் 200 தியேட்டரில் “விக்ரம்”; ஆர்ப்பரித்து கொண்டாடிய ரசிகர்கள்!

 மலேசியாவில் 200 தியேட்டரில் “விக்ரம்”; ஆர்ப்பரித்து கொண்டாடிய ரசிகர்கள்!

கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”.

பல நாடுகளில் இப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் பலரும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். அனிருத்தின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

மலேசியாவில் 200க்கும் அதிகமான தியேட்டரில் இப்படம் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது. அங்கு இப்படத்தை ரசிகர்கள் பெரும் திருவிழாவை கொண்டாடுவது போல் ஆர்பரித்து கொண்டாடி வருகின்றனர்.

 

Related post