விக்ரம் “ரோலக்ஸ்” எண்ட்ரீயில் தீப்பிடித்த திரை… அலறி அடித்து ஓட்டம் பிடித்த ரசிகர்கள்!

 விக்ரம் “ரோலக்ஸ்” எண்ட்ரீயில் தீப்பிடித்த திரை… அலறி அடித்து ஓட்டம் பிடித்த ரசிகர்கள்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், புதுச்சேரி அருகே காலாப்பட்டு அருகே உள்ள ஜெயா திரையரங்கில் “விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை இரவு காட்சி வழக்கம்போல் திரையிடப்பட்டது. அப்போது, க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவின் எண்ட்ரீயின் போது திரையரங்கில் உள்ள திரை தீப்பிடிக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் கொஞ்சமாக தீ திரை முழுவதுமாக பரவ தொடங்கியது. இதனால், ரசிகர்கள் அலறி அடித்துக் கொண்டு திரையரங்கை விட்டு வெளியே ஓடினர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

அதற்குள், திரை முழுவதுமாய் தீக்கிரையானது. இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே திரையரங்கு தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post