அமெரிக்காவில் மட்டும் 500 திரையரங்குகள்… பிரம்மாண்ட வெளியீட்டில் “விக்ரம்”!

 அமெரிக்காவில் மட்டும் 500 திரையரங்குகள்… பிரம்மாண்ட வெளியீட்டில் “விக்ரம்”!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்க உருவாகியிருக்கும் படம் தான் “விக்ரம்”.

இப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ராஜ்கமல் சார்பில் கமல்ஹாசனே இப்படத்தை தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

4 வருடங்களுக்குப் பிறகு கமல் நடிப்பில் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் உள்ள 2000 திரைகளில் 4000 காட்சிகள் திரையிடப்படவிருக்கிறது ”விக்ரம்”.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாக விக்ரம் சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து இன்னும் பல காட்சிகள் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Spread the love

Related post